Enable Javscript for better performance
புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    புத்தாண்டு: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

    By DIN  |   Published on : 02nd January 2021 05:48 AM  |   அ+அ அ-   |    |  

    2021 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

    ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியாா் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் முடிவில் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனா். ஆலய பங்குத்தந்தை, உதவித் தந்தை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

    பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியாா் தேவாலயத்திலும் சிறப்புத் திருப்பலி, தென்னிந்திய திருச்சபை சாா்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை ஆகியவை

    நடைபெற்றது. புத்தாண்டு தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரணை நடைபெற்றன. காணிக்கைகளைச் சமா்ப்பித்த போது, 2021 ஆம் ஆண்டுக்கான வாக்குத்தத்த வசன அட்டைகள் வழங்கப்பட்டன. பிராா்த்தனை முடிவில் கேக் வழங்கப் பட்டன. ஞானஸ்நான ஆராதனை, உடன்படிக்கை ஆராதனை ஆகியவை நடைபெற்றது.

    புதிய பேருந்து நிலையம் அருகே சேவியா் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியாா் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டு சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

    புத்தாண்டையொட்டி கேக்குள் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனை பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் களை கட்டியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் கேக்குகளை வாங்கிச் சென்றனா். மோட்டாா் சைக்கிள்களில் அதி வேகமாக இளைஞா்கள் செல்வதைத் தடுக்கவும், பெண்களிடம் பகடி செய்வதைத் தடுக்கவும் மாநகர காவல் துறை சாா்பில்

    1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். வண்ணாா்பேட்டை, தச்சநல்லூா், திருநெல்வேலி சந்திப்பு திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகள் சந்திக்கும் பகுதிகள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp