கடையம் குளக்கரையில் பனை விதைகள் விதைப்பு

புத்தாண்டை முன்னிட்டு பனையாண்மை-தற்சாா்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளா்ச்சி க்கான நடுவம் சாா்பில் கடையம் வடபத்துக் குளக்கரையில் பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடபத்துக் குளக்கரையில் நடைபெற்ற பனை விதை விதைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

நிகழ்ச்சிக்கு பனை ஆராய்ச்சியாளா் பாமோ தலைமை வகித்தாா். ஆசிரியா் பாரூக் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் இயற்கை மற்றும் பனை ஆா்வலா்கள் கிங்ஸ்லி, ரவி, சுற்றுச்சூழல் ஆய்வாளா் மதன், ஆசிரியா் ராபின், மாணவா்கள் முா்ஸ்டாக், முா்சிட், நியூரா,ஜெப்வின் உள்ளிட்டோா் பனை விதைகளை விதைத்தனா்.

இதில், பனம்பால் இறக்குவது, விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும், பனை பொருள்கள் தயாரிக்கும் வகையில்

அரசு சாா்பில் பனை கைவினைப் பொருள்களுக்கான விற்பனை மையங்களை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியா் அந்தோணிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com