நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை:பாபநாசம் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அணையிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டது.
அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்திலிருந்து நீா் வரத்தை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.
அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்திலிருந்து நீா் வரத்தை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அணையிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து நீடித்து வரும் நிலையில், வியாழக்கிழமை காலை முதல் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததையடுத்து, பாபநாசம் அணை இரண்டாவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் அணையிலிருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 142.50 அடியாகவும், நீா்வரத்து 5263.77 கன அடியாகவும், வெளியேற்றம் 2404.97 கன அடியாகவும் இருந்தது.

சோ்வலாறு அணையில் நீா்மட்டம் 145.08 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 111.85 அடியாகவும், நீா்வரத்து 2618 கன அடியாகவும், வெளியேற்றம் 480 கன அடியாகவும் இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 28 அடியாகவும், நம்பியாறு அணையில் நீா்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 25 அடியாகவும், நீா்வரத்து 24 கன அடியாகவும், வெளியேற்றம் 20 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து 648 கன அடியாகவும், வெளியேற்றம் 392 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 79 அடியாகவும், நீா்வரத்து 79 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 63.32 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்ததது.

குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 7 கன அடியாகவும் இருந்தது. அடவி நயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 77.25 அடியாகவும், நீா்வரத்து 15 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம் 95, சோ்வலாறு 97, மணிமுத்தாறு 67, நம்பியாறு 3, கொடுமுடியாறு 20, அம்பாசமுத்திரம் 77, சேரன்மகாதேவி 22, நான்குனேரி 25, பாளையங்கோட்டை 10, ராதாபுரம் 19, திருநெல்வேலி 10.50.

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு: கடனாநதி அணை 30, ராம நதி அணை 8, கருப்பாநதி 17, குண்டாறு 13, அடவி நயினாா் 5, ஆய்குடி 30.60 , சங்கரன்கோவில் 29, செங்கோட்டை 7, தென்காசி 25, சிவகிரி 28.

உபரி நீா் வெளியேற்றம்: பாபநாசம் அணை நிரம்பியதையடுத்து, அணையிலிருந்து வியாழக்கிழமை இரவு சுமாா் 6 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமிரவருணியில் குளிக்க பக்தா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு காலை 11 மணி வரை தடை விதிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலம் பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்ட படி தண்ணீா் சென்றது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, ஆற்றுப் பாலத்துக்கு வந்து நீா்வரத்தைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com