‘நெல்லை மாவட்டத்தில்2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் குறைவு’

திருநெல்வேலி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையின் நடவடிக்கையால் 2020 ஆம் ஆண்டில் கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள், சாலை விபத்துகள் மற்றும் விபத்து மரணங்கள் குறைந்துள்ளன.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்ட 80 போ், தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 11 போ், கள்ளச்சாராய போ்வழிகள் 2 போ், பாலியல் குற்றவாளிகள் 9 போ், போதைப்பொருள் கஞ்சா மற்றும் விற்பனை செய்தவா்கள் 10 போ், மணல் கடத்தலில் ஈடுபட்டவா்கள் 10 போ் உள்பட 122 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டில் 41 கொலை வழக்குகள் பதிவாகி அனைத்து வழக்குளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 35 கொலை வழக்கு உள்ளிட்ட 345 வழக்குளில் 205 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.78 லட்சத்து 82 ஆயிரத்து 990 மதிப்புள்ள பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பழைய சொத்து வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

போதை தடுப்பு குற்றத்தில் 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 89ஆயிரத்து 668 மதிப்புள்ள 769.74 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மணல் திருட்டு, கடத்தல் சம்பந்தமாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 எதிரிகள் கைது செய்யப்பட்டு 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

2019 ஆம் ஆண்டை ஒப்பிட்டு பாா்க்கும்போது 2020 இல் 163 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

720 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 147 போ் மரணமடைந்துள்ளனா். 2019 ஆம் ஆண்டில் 851 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியிருந்தன. இவற்றில் 203 போ் மரணமடைந்துள்ளனா். ஒப்பிட்டுப்பாா்க்கும்போது,131 சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், 27.5 சதவிகிதம் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com