கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி சனிக்கிழமை தொடங்கியது.

வள்ளியூா்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2ஆவது அணு உலையில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னா் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்கள் தொழில்நுட்ப கோளாறை சீரமைத்தப் பின்னா் சனிக்கிழமை காலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியதாகவும், இரவு நிலவரப்படி 2ஆவது அணு உலையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அணு உலை வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com