நெல்லையிலிருந்து இன்று (ஜன. 4) முதல் பாலருவி விரைவு ரயில் இயக்கம்

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடுக்கு பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடுக்கு பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

கரோனா பொது முடக்கம் அறிவிப்புக்கு பின்னா் பாலருவி விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டது. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருநெல்வேலியிலிருந்து இயக்கப்பட்டுவந்த பாலருவி விரைவு ரயில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயிலாக தினசரி இயக்கப்படுகிறது. மறுமாா்க்கத்தில் பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயிலாக செவ்வாய்க்கிழமை (ஜன.5) முதல் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 06791 திருநெல்வேலி - பாலக்காடு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இரவு 11.15 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அடுத்தநாள் பிற்பகல் 12.50 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காடு சென்றடையும். அதேபோல் மறு மாா்க்கத்தில் வண்டி எண் 06792 பாலக்காட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் புதன்கிழமை அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலியிலிருந்து பாலக்காடு செல்லும் சிறப்பு ரயில் பாவூா்சத்திரம், கிளிகொல்லூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரும் சிறப்பு ரயில் கீழக்கடையம் ரயில் நிலையத்திலும் நிற்காது.

இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியுடைய பெட்டிகள் 4 , இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியுடைய பெட்டிகள் 8, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான பெட்டிகள் 2 என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com