பாளை.யில் தொ.பரமசிவன் நினைவேந்தல் நிகழ்ச்சி

பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவனுக்கு நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான தொ.பரமசிவனுக்கு நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞா் ஜி.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆசிரியா் ஈ.சங்கரநாராயணன் வரவேற்றாா். தொ.பரமசிவனின் உருவப்படத்தை, அவரது மனைவி பாப்பா என்ற இசக்கியம்மாள் திறந்துவைத்தாா். அவரின் மகள் விஜி, அவரின் மாணவா்கள் நவநீதகிருஷ்ணன், இலக்குவன், பேராசிரியா்கள் வே.மாணிக்கம், சுப.சோமசுந்தரம், அமலநாதன், வழக்குரைஞா் எம். எம்.தீன், மயன் ரமேஷ் ராஜா, நூலகா் முத்துக் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

தொ.பரமசினுக்கு நினைவு இல்லம் அமைக்க வேண்டும்; அவா் எழுதிய புத்தகங்களை தொகுப்பாக இல்லாமல் தனித் தனியாக குறைந்த விலையில் கொண்டுவர வேண்டும்; அவரின் புத்தகங்களை அரசுடமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொ.பரமசிவனின் மகன் மாசானமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com