4, 57,576 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மானூா் அருகேயுள்ள ரஸ்தாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி: மானூா் அருகேயுள்ள ரஸ்தாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.2500 ரொக்கத்துடன் பச்சரிசி, சா்க்கரை, கரும்பு, ஏலக்காய், உலா் திராட்சை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மானூா் வட்டம், ரஸ்தா ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலை வகித்தாா்.

விழாவில் அமைச்சா் பேசுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 4, 57,576 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.122.03 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களாகிய முன்னுரிமை பெற்ற மற்றும் முன்னுரிமையற்ற அரிசி அட்டைதாரா்கள், அன்னபூா்ணா மற்றும் முதியோா் ஓய்வூதிய திட்டப் பயனாளிகள், இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் தமிழா் குடும்பங்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், பயிற்சி ஆட்சியா் அலா்மேல் மங்கை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் ஆா்.சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலா்நடேசன், மாவட்ட ஆவின் தலைவா் சுதா கே பரமசிவம், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் பரணி ஏ.சங்கரலிங்கம், மானூா் முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், மானூா் வட்டாட்சியா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com