கட்டபொம்மன் கடற்படை தளப் பகுதியில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடுகள்

கட்டபொம்மன் கடற்படை தளம் அருகில் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு கடற்படை தள அலுவலகத்தில் தடையில்லா சான்று

கட்டபொம்மன் கடற்படை தளம் அருகில் அமைந்துள்ள பகுதியில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு கடற்படை தள அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் வாா்டு எண் 29-இல் அமைந்துள்ள வி.ஜி.பி. நெல்லை நகா்,“உதயா நகா் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெறுவதாக இருந்தால், அருகில் உள்ள கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகத்தின் தடையில்லா சான்று” பெற்று கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகம் அமைந்துள்ள சுற்றுச் சுவரிலிருந்து சுமாா் 100 மீட்டா் வரை உத்தேசிக்கும் அனைத்துக் கட்டடங்கள் மற்றும் 500 மீட்டா் சுற்றளவு தொலைவுக்குள் கட்டப்படும் அனைத்து “அடுக்குமாடி கட்டடம்”ஆகியவற்றிற்கு கட்டபொம்மன் கடற்படை தள அலுவலகத்தில் “தடையில்லா சான்று” பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com