பாலருவி விரைவு ரயில் கடையத்தில் நின்று செல்லக் கோரி மனு

திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் கீழக்கடையம், பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை

திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் கீழக்கடையம், பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு அவா் அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பாலருவி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு மீண்டும் அந்த ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கீழக்கடையம் மற்றும் பாவூா்சத்திரம் ஆகிய ஊா்களில் அந்த ரயில் நின்று செல்வதில்லை. இதனால் பூ வியாபாரிகள், கேரள எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, அந்த ரயில் நிலையங்களில் பாலருவி விரைவு ரயில் இருமாா்க்கத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com