மாநகர அடிப்படை பிரச்னைகளை கட்செவி அஞ்சலில் தெரிவிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து கட்செவி அஞ்சலில் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து கட்செவி அஞ்சலில் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் குப்பை, வடிகால், பொது சுகாதாரம், குடிநீா் விநியோகம், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்கடை தொடா்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை மாநகராட்சிக்கு செல்லிடப்பேசியில் இருந்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தெரிவித்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 9489930261 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் புகாா் அளிக்கலாம். அந்தக் கோரிக்கை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலக அலுவலருக்கு அனுப்பப்படும். இந்தச் சேவை புதன்கிழமை (ஜன. 6) முதல் செயல்படுத்தப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com