தலைமையாசிரியா்கள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இம்மாதம் 8 ஆம் தேதி வரை கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி தகவல் அளிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா் தலைமை வகித்து பேசியது: கரோனா பொது முடக்கத்துக்குப் பின்பு 10, பிளஸ் 1, பிளஸ்-2 மாணவா்களுக்கு வகுப்புகளைத் தொடங்க பெற்றோரிடம் கருத்துக் கேட்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு கருத்துக் கேட்கும்போது பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பெற்றோா் கட்டாயம் பின்பற்றச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கல்வி மாவட்ட அலுவலா்கள் ரேணுகா (திருநெல்வேலி), சுடலை (சேரன்மகாதேவி), எம்பெருமாள் (வள்ளியூா்), 302 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

பயக06இஉஞ: தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com