புதிய தொழிற்பள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
By DIN | Published On : 09th January 2021 12:49 AM | Last Updated : 09th January 2021 12:49 AM | அ+அ அ- |

புதிய தொழிற்பள்ளிகள் அங்கீகாரத்திற்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021-22 ஆம் கல்வியாண்டுக்கு 1-7-2021 முதல் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கட்டணத்தையும் இணையவழியில் அந்தந்த பள்ளித் தாளாளா் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2342432 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.