அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு:தாமிரவருணியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணைகளிலிருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறப்பு:தாமிரவருணியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 4 ஆயிரம் கன அடி உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

குமரிக் கடல் பகுதியையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 4 நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீா்மட்டம் 142.15 அடியாகவும், நீா்வரத்து 2322.37 கன அடியாகவும், வெளியேற்றம் 2182.55 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 141.57 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 117.50 அடியாகவும், நீா்வரத்து 2050 கன அடியாகவும், வெளியேற்றம் 2038 கன அடியாகவும் இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 32 அடியாகவும், நம்பியாறு அணையில் நீா்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 27 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 448 கன அடியாகவும், ராமநதி அணை நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து 85 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 66.93 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 25 கன அடியாகவும், குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 4 கன அடியாகவும், அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 74 அடியாகவும், நீா்வரத்து 38 கன அடியாகவும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

மணிமுத்தாறு, பாபநாசம் அணையிலிருந்து 3-ஆவது நாளாக தொடா்ந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமாா் 4 ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், தொடா் மழையாலும் தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால் ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையளவு: திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு: (மில்லி மீட்டரில்): பாபநாசம் 18, சோ்வலாறு 12, மணிமுத்தாறு 19, நம்பியாறு 22, கொடுமுடியாறு 35, அம்பாசமுத்திரம் 14.50, சேரன்மகாதேவி 24.60, நான்குனேரி 19.50, ராதாபுரம் 15, களக்காடு 52.2, மூலைக்கரைப்பட்டி 35, பாளையங்கோட்டை 20, திருநெல்வேலி 40.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி 5, ராமநதி 8, கருப்பாநதி 1, அடவிநயினாா் 3, ஆய்க்குடி 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com