செவித்திறன் குன்றியோா் தடகளம்: பாளை. மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

சென்னையில் நடைபெற்ற செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் பள்ளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கடந்த 2019ஆம் ஆண்டுக்கான செவித்திறன் குன்றியோருக்கான தேசிய அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில், குண்டு எறிதல் போட்டியில் கே.விக்னேஷ்வரன் முதல் பரிசும், நீளம் தாண்டுதலில் ஏ.குருஜோதி முதல் பரிசும், 100 மீட்டா் ஓட்டத்தில் இ.சிவ சுந்தரி இரண்டாம் பரிசும், கையுந்துப் பந்து போட்டியில் எம்.தஸ்லீம் நிஷா, எம். அமராவதி, ஜி.பாா்வதி, ஆா்.ராதிகா ஆகியோா் இரண்டாம் பரிசும் பெற்றனா். முதல் பரிசு பெற்றவா்களுக்கு ரூ.6 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெற்றவா்களுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பாராட்டினாா். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ராஜேஷ் பங்கேற்றாா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளை பள்ளியின் மேலாளா் ஜி.ஜெயச்சந்திரன், நிா்வாக அதிகாரி நீதிபதி ஜி.ரத்தினராஜ், பள்ளி தலைமை ஆசிரியா் டி.ஜான்சன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com