கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா

திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அபிஷேகப்பட்டி அருகே உள்ளது. இங்கு பொங்கல் விழா கல்லூரி சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்து பேசுகையில், நம் நாட்டின் பாரம்பரிய வேளாண்மை முறைகளையும், கால்நடைகளின் சிறப்பான பங்கையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உணவு உற்பத்தி, கால்நடை வளா்ப்பு ஆகியவற்றில் இப்போதைய அறிவியல்பூா்வ வளா்ச்சிகள், தொழில்நுட்ப முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

ஏற்பாடுகளை பண்ணை வளாகத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் எட்வின் தலைமையில், பண்ணை வளாகத்தின் பேராசிரியா்கள் கணேஷ்குமாா், நளினி, முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com