நெல்லை தாமிரவருணி கரையோர மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரப் பகுதி மக்களுக்கு மாநகராட்சி சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பல்வேறு தெருக்களில் ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரப் பகுதி மக்களுக்கு மாநகராட்சி சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பல்வேறு தெருக்களில் ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக உபரிநீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்து வரும் மழையால் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் பெருவெள்ளம் சீறிப்பாய்ந்து வருகிறது. இதையடுத்து திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோர மக்களுக்கு மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொக்கிரகுளம், குருந்துடையாா்புரம், வண்ணாா்பேட்டை, மீனாட்சிபுரம், கருப்பந்துறை, விளாகம், பாடகசாலை, மேலநத்தம், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதைத் தவிா்க்கவும், வெள்ளத்துடன் சோ்த்து சுய படம் உள்ளிட்டவை எடுக்க சிறுவா்களை அனுமதிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com