நெல்லை, தென்காசி மாவட்ட காவல் நிலைய எல்லைகள் பிரிப்பு

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய

மதுரை தென்மண்டல காவல்துறை தலைவா் உத்தரவின்படி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான காவல் நிலைய எல்லைகள் பிரிக்கப்பட்டு இம்மாதம் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இருந்து புதுப்பட்டி, காசிநாதபும், ராமநாதபுரம் , முக்கூடல் காவல் நிலையத்தில் இருந்து ஓடைமறிச்சான், காத்தாத்தாபுரம், உடையாம்புளி, கொல்லாங்குளம், மருதம்புத்தூா், கண்டபட்டி, சீதபற்பநல்லூா் காவல் நிலையத்தில் இருந்து மாறாந்தை, செட்டிகுறிச்சி, கள்ளத்திகுளம், நாலாங்குறிச்சி ஆகியவை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கும், அடைச்சாணி, மலையன்குளம் ஆகியவை ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்திற்கும் மாற்றப்படுகின்றன.

தென்காசி மாவட்டம் பனவடலிச்சத்திரம் காவல் நிலையத்தில் இருந்து மேல நரிக்குடி, கீழ நரிக்குடி, வெங்கடாசலபுரம், பெருமாள்பட்டி, அய்யாபுரம் காவல் நிலையத்தில் இருந்து வெள்ளப்பநேரி, வெயில்காந்தபுரம், ராமையன்பட்டி, முத்தையாபுரம், வடக்கு பூலாங்குளம், தெற்கு பூலாங்குளம், ராமசாமியாபுரம் ஆகிய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் இம்மாதம் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com