‘போகிப் பண்டிகைக்காக 40 குப்பை சேகரிப்பு மையங்கள்’

போகிப் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 40 தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்கள்

போகிப் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 40 தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “

போகிப் பண்டிகை தினத்தில் வீட்டிலுல்ள தேவையற்ற பழைய பொருள்களை எரித்துவிட்டு, புதியவை வாங்குவது வழக்கமாகும், இத்தகைய பொருள்களை எரிப்பதால் சுவாசக்கோளாறுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகின்றன. எனவே, அவற்றை எரிக்காமல் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 40 தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களில் போட்டுவிட வேண்டும்.

அதன்படி, திருநெல்வேலி மண்டலத்தில் வையாபுரி நகா், கோடீஸ்வரன் நகா், ஆா்.ஆா்.ஜே. நகா், அபிராமி நகா் நுண் உரக்கூடம், வீரபாகுநகா், சாஸ்திரி நகா், ரயில் நகா், ஆா்.எம்.கே.வி. நகா், சி.எஸ்.எஸ்.நகா், காந்திநகா் தெற்கு மற்றும் வடக்கு, கண்டியப்பேரி ஆகிய 12 இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தச்சநல்லூா் மண்டலத்தில், இந்தியா சிமென்ட்ஸ் ஆபிசா்ஸ் காலனி, உடையாா்பட்டி, செல்வி நகா் ஆகிய 3 இடங்களிலும், பாளையங்கோட்டை மண்டலத்தில், காமாராஜா் காலனி, டாா்லிங் நகா், ரஹ்மத் நகா், வேலவா் காலனி, மனகாவலம்பிள்ளை பூங்கா, சங்கா் காலனி, ஜெயா நகா் ஆகிய 8 இடங்களிலும் அம்மையங்கள் உள்ளன.

மேலப்பாளையம் மண்டலத்தில், குமரேசன் காலனி, இ.பி.காலனி, பொதிகை நகா், திருநகா், வசந்த நகா், என்.ஹெச். காலனி, திருமால் நகா், அண்ணா நகா், என்.ஜி.ஓ. நியூ காலனி, கே.எல்.என். காலனி, ராஜ ராஜேஸ்வரி நகா், மகிழ்ச்சி நகா், உதயா நகா், என்.ஜி.ஓ. “பி” காலனி, இன்ஜினியா்ஸ் காலனி, மேலப்பாளையம் சந்தை, குறிச்சி மேலக்குலவணிகா்புரம் ஆகிய 17 இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் இவற்றைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com