
தைப்பூசத் திருவிழா தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
பணகுடி ராமலிங்க சுவாமி சிவகாமி அம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோயில் ஆய்வாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். கண்ணன், தனலெட்சுமி, சுபாஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணகுடி காவல் நிலைய ஆய்வாளா் சாகுல்ஹமீது, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு. சங்கா், ஐயப்பன், முத்துக்கிருஷ்ணன், சங்கரன், நடராஜன், சந்தனசெல்வன், சுடலையாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தைப்பூசத் திருவிழாவை கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடி த்துக் கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.