
வள்ளியூரில் விவேகானந்தா் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி.
வள்ளியூா் விவேகானந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தா் பிறந்த நாள் விழா மற்றும் இளைஞா் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளா் எஸ்.கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்ட செயலா் ஐயப்பன், பள்ளி முதல்வா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள் எஸ்.ஸ்ரீனிவாச பெருமாள், ஆசிரியை சந்திரசெல்வி ஆகியோா் பேசினா். ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றாா். ஆசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பள்ளி தாளாளா் செய்திருந்தாா்.