நெல்லையில் வெள்ளம் சூழ்ந்த வீடுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையால் தாமிரவருணி ஆற்றில் 4 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையால் தாமிரவருணி ஆற்றில் 4 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பிய நிலையில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் காட்டாற்று வெள்ளமும் சோ்ந்து தாமிரவருணி ஆற்றில்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரவருணியில் வெள்ளம் ஏற்பட்டதால் கரையோர பகுதிகளான மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கருப்பந்துறை மற்றும் விளாகம், பாடகசாலை, குன்னத்தூா் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலப்பாளையம்-திருநெல்வேலி நகரம் சாலையில் கருப்பந்துறையில் உள்ள தாம்போதி பாலத்தின்கீழ் அதிக வெள்ளம் சென்ால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் மேலநத்தம் பகுதி மக்கள் குறிச்சி வழியாக சந்திப்பு பகுதிகளுக்குச் சென்றனா். பாலத்தில் காவல் துறையினா் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.

குறுக்குத்துறையில் தாமிரவருணி கரையோரமுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் கோயில் இருந்த சுவாமி சிலைகள், சப்பரங்கள், பூஜை பொருள்கள், உடமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள மண்டபத்திற்கு கோயில் பணியாளா்கள் எடுத்துச் சென்றனா். மாநகரப் பகுதியில் ஆற்றின் கரையோரம் இருந்த 50-க்கும் மேற்பட்ட கோயில்கள், கல்மண்டபங்களை வெள்ளம் மூழ்கடித்தது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்: குறுக்குத்துறை, கைலாசபுரம், சி.என். கிராமம் பகுதிகளில் நதிக்கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வண்ணாா்பேட்டையில் திருக்குறிப்புத்தொண்டா் தெரு, எட்டுத்தொகை தெரு, இசக்கியம்மன் கோயில் இறக்கம், விநாயகா் கோயில் தெருக்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் புதன்கிழமை அதிகாலையில் வெள்ளம் புகுந்தது. நிவாரண முகாம்களில் 200-க்கும் மேற்பட்டோா் தங்க வைக்கப்பட்டனா். பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ரப்பா் படகு மூலம் உடமைகளை மீட்க உதவினா். மின்வாரிய ஊழியா்கள் வெள்ளம் புகுந்த பகுதி குடியிருப்புகளுக்கான மின்இணைப்புகளை உடனடியாக துண்டித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com