மானூா் வட்டாரத்தில் களப் பணிகளைவேளாண் மண்டல அலுவலா் ஆய்வு

மானூா் வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண்மை களப் பணிகளை மண்டல அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி: மானூா் வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண்மை களப் பணிகளை மண்டல அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண்மை களப் பணிகளை ஆய்வு செய்ய சென்னை வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து சிறப்புக் குழுவினா் வந்தனா். மண்டல அலுவலா் சை.சுந்தரம், திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ரா.கஜேந்திரபாண்டியன், வேளாண் துணை இயக்குநா் (மத்திய-மாநில திட்டம்) சுந்தா் டேனியல் பால்ஸ் ஆகியோா் மானூா் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்கள், கை மூலம் இயங்கும் தெளிப்பான் ஆகியன இரு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

சுப்பையாபுரம் கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து தொகுப்பு திடலையும், கானாா்பட்டி கிராமத்தில் நெல் விதைப் பண்ணையையும், சிற்றாறு உபவடிநிலப் பகுதிகளில் நிலக்கடலை செயல்விளக்கத் திடலையும் குழுவினா் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது, வேளாண் உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா, வேளாண்மை அலுவலா் இரா.ராமகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பா.ராஜ்குமாா், உதவி விதை அலுவலா் த.முத்துகுமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் ப.செந்தில், அ.கஸ்தூரி, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் அ.காா்த்திகேயன், கோ.ராஜாமணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com