நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயிலில் தீ: பெரும் சேதம் தவிர்ப்பு

நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயிலில் தாழையூத்து அருகே ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருநெல்வேலி: நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயிலில் தாழையூத்து அருகே ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி வழியாக வந்துகொண்டிருந்தது. கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக வந்து கொண்டிருந்தபோது ரயிலின் எஸ் 3 ரயில் பெட்டியில் பிரேக் கட்டை உராய்வு காரணமாக தீப்பிடித்து புகை வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. 

பின்னர், ரயிலில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் பாதுகாப்பு காவலர்கள் உள்ளிட்டோர் தீயை அணைத்தனர். ரயிலில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது.

இதையடுத்து, சுமார் அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மாலை 5 மணியளவில் ரயில் புறப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com