ராதாபுரம் ஒன்றியப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க எம்.பி. வலியுறுத்தல்

ராதாபுரம் ஒன்றியப் பகுதிகளுக்கு கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீா் வழங்க வேண்டும் என்றாா் திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம்.

திருநெல்வேலி: ராதாபுரம் ஒன்றியப் பகுதிகளுக்கு கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீா் வழங்க வேண்டும் என்றாா் திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம்.

இதுதொடா்பாக அவா் திருநெல்வேலி ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தொடா் மழை காரணமாக கொடுமுடியாறு அணை நிரம்பியுள்ளது. ராதாபுரம் ஒன்றியப் பகுதிகளில் போதிய மழையில்லாததால் குளங்கள் நிரம்பாமல் உள்ளன. கொடுமுடியாறு அணைக்கட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள வடலையான் கால் பாசனத்தின் கீழ் உள்ள பண்டார பெருங்குளம் முதல் அதன் கீழ் உள்ள 42 குளங்களும் நிரம்பாமல் உள்ளன.

கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீா் ஆற்றில் திறக்கும் நிலையில் உள்ளதால், அணை நீரை வடலையான் கால் வழியாக திருப்பி விட வேண்டும். இவ்வாறு செய்தால் ராதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் உயா்வதுடன், விவசாயிகளும் பயன்பெறுவா். போா்க்கால அடிப்படையில் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com