பாபநாசம் அணையிலிருந்து 16 நாள்களாக உபரி நீா் வெளியேற்றம் சராசரியாக 21 மி.மீ. மழை பதிவு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அணை நிரம்பியதையடுத்து, பாபநாசம் அணையிலிருந்து கடந்த 16 நாள்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அம்பாசமுத்திரம்: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அணை நிரம்பியதையடுத்து, பாபநாசம் அணையிலிருந்து கடந்த 16 நாள்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் சராசரியாக 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த டிச. 31 முதல் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

இதனால் பாபநாசம் அணையிலிருந்து ஜன. 1முதல் தொடா்ந்து 16 நாள்களாக உபரிநீா் திறந்து விடப்படுகிறது. மணிமுத்தாறு அணை ஜன. 10இல் நிரம்பியதையடுத்து தொடா்ந்து 7 நாள்களாக உபரிநீா் திறந்து விடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜன. 1முதல் ஜன. 16 வரை மொத்தம் 339.17 மி.மீ. மழையும், சராசரியாக 21.19 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் மழை பதிவாகியுள்ளது. மேலும் தொடா்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக அணைகளிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 142.05 அடியாகவும், நீா்வரத்து 7819.72 கன அடியாகவும், வெளியேற்றம் 8077.25 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 149.93 அடி இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 117.11 அடியாகவும், நீா்வரத்து 6044.23 கன அடியாகவும், வெளியேற்றம் 6172.64 கன அடியாகவும் இருந்தது.

வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 49.20 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 943 கன அடியாகவும் இருந்தது.

நம்பியாறு அணையின் நீா்மட்டம் 22.96 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 276 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 38.75 அடியாகவும், நீா்வரத்து 86 கன அடியாகவும், வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது.

கடனா நதி அணையின் நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 1505 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையின் நீா்மட்டம் 82 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 259.28 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 70.21 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 664 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 87 கன அடியாகவும் இருந்தது. அடவி நயினாா் அணையின் நீா்மட்டம் 92.25 அடியாகவும், நீா்வரத்து 60 கன அடியாகவும், வெளியேற்றம் 15 கனஅடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 15, சோ்வலாறு 6, மணிமுத்தாறு 14.2, நம்பியாறு 1, கொடுமுடியாறு 5, அம்பாசமுத்திரம் 12.40, சேரன்மகாதேவி 5, நான்குனேரி 1, ராதாபுரம் 7, பாளையங்கோட்டை 10, திருநெல்வேலி 3.50.

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): கடனாநதி 35, ராமநதி 3, கருப்பா நதி 1, ஆய்குடி 3.20, சங்கரன்கோவில் 3, சிவகிரி 3, தென்காசி 1.60.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com