பொங்கல் விடுமுறை நிறைவு: பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றதால் திருநெல்வேலியில் பேருந்து நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றதால் திருநெல்வேலியில் பேருந்து நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.

தமிழா் திருநாளான பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவா் தினம் ஆகியவை அடுத்தடுத்து வந்ததால் அரசு அலுவலகங்களுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சென்னை, திருப்பூா், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்பி பொங்கலைக் கொண்டாடினா்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து அவரவா் வசிக்கும் பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக இருந்தது.

சிறப்புப் பேருந்துகள்: திருநெல்வேலியிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வழக்கமாக சுமாா் 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னைக்கு, கோவைக்கு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் பெருமாள்புரத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. மழையால் ஞாயிற்றுக்கிழமையும் சேறும்-சகதியுமாக பேருந்து நிலையம் காட்சியளித்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

இதுதவிர பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்குச் செய்யப்படவில்லை; குடிநீா்க் குழாய்களில் தண்ணீா் வரவில்லை; போதிய இலவச கழிப்பறை வசதி இல்லை என்று புகாா் தெரிவித்த பயணிகள், பண்டிகைக் காலங்களில் இ-டாய்லெட் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

தனியாா் ஆம்னி பேருந்துகளில் இம் மாதம் 20 ஆம் தேதி வரை பயணிகள் முழுமையாக முன்பதிவு முடிந்துள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com