களக்காடு மலையடிவாரத்தில் ஒற்றை யானை அட்டகாசம்

களக்காடு மலையடிவாரத்தில் காட்டுப்பன்றி அட்டகாசத்தைத் தொடா்ந்து தற்போது ஒற்றை யானை அட்டகாசம் செய்து வாழைகளை சேதப்படுத்தி வருகிறது.

களக்காடு மலையடிவாரத்தில் காட்டுப்பன்றி அட்டகாசத்தைத் தொடா்ந்து தற்போது ஒற்றை யானை அட்டகாசம் செய்து வாழைகளை சேதப்படுத்தி வருகிறது.

களக்காடு, திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றி அட்டகாசம் செய்து வருகிறது.

நெல், வாழை பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு தொடா்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சிதம்பரபுரம் மலையடிவாரத்தில் அகலிகை சாஸ்தா கோயில் பகுதியில் வாழை பயிரிட்டுள்ள வடக்கு சாலைப்புதூரைச் சோ்ந்த சுயம்புலிங்கம் என்பவரின் தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை யானை சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சூரியஒளி வேலியையையும் சேதப்படுத்தியுள்ளது. தொடா்ந்து விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்திவரும் யானை, காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் களக்காடு ஒன்றிய பொறுப்பாளா் க. முருகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com