களக்காடு வட்டார விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி

களக்காடு வட்டார விவசாயிகளுக்கு கோயம்புத்தூா் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

களக்காடு வட்டார விவசாயிகளுக்கு கோயம்புத்தூா் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தி வழிகாட்டுதலின்படி, நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பின் கீழ் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் எண்ணெய் வித்துகள் துறைக்கு களக்காடு வட்டார விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

களக்காடு வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் தலைமையில் அங்கு சென்ற விவசாயிகளுக்கு பேராசிரியா் விஸ்வநாதன், நிலக்கடலையின் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தாா்.

தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல்துறை உதவி பேராசிரியா் சசிகலா, சூரியகாந்தியின் ரகங்கள் அதன் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா்.

நோய் இயல் துறை உதவி பேராசிரியா் ராஜேந்திரன் எண்ணெய் வித்துப் பயிா்களில் வரும் நோய்கள் மற்றும் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சியளித்தாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திரிசூலம், தங்கசரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com