நெல்லையப்பா் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதி அம்பாள் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ம் -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி எனப் பெயா் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் காட்சி சுவாமி சன்னதியில்

நடைபெற்றது. இறைவனின் திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில், சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டிருந்தது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இரவில் சுவாமி,

அம்பாள் பஞ்சமூா்த்தி ரதவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com