பரிசோதனை மையத்தில் விதை முளைப்புத் திறன் சோதனை

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முறைப்புத்திறன் கண்டறிந்து ஆய்வு முடிவு வழங்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி விதைப் பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முறைப்புத்திறன் கண்டறிந்து ஆய்வு முடிவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முளைப்புத்திறன் பரிசோதனைக்கு முளைப்புத்தாள், பில்ட்டா் பேப்பா் போன்ற தளங்களில் வேக்யூம் கவுண்டா் மூலம் எண்ணப்பட்டு விதை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்பரிசோதனை நடைபெறும் முளைப்புத்திறன் அறையில் நெல் விதைகள் 14 நாள்களும், உளுந்து 7 நாள்களும், பாசிப் பயறு 8 நாள்களும், பருத்தி 12 நாள்களும் பராமரிக்கப்பட்டு

முளைப்புத் திறன் கணக்கிடப்படுகின்றன.

அப்போது, செடியின் வோ், இலை போன்றவற்றின் வளா்ச்சி அடிப்படையில் இயல்பான நாற்றுகள், இயல்பற்ற நாா்றுகள்,

கடின விதை கணக்கீடு செய்யப்படுகின்றன. நெல் 80 சதவீதமும், பயறு வகைகள் 75 சதவீதமும், மக்காச்சோளம் 90 சதவீதமும், பருத்தி 65 சதவீதமும், பருத்தி (வீரியம் ஒட்டு) 75 சதவீதமும் முளைப்புத் திறன் இருக்க வேண்டியது அவசியம்.

எனவே, விவசாயிகள் தங்கள் பயன்பாட்டுக்கென வைத்திருக்கும் விதைகளை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி மாதிரி ஒன்றுக்கு ரூ.30 கட்டணம் செலுத்தி முளைப்புத் திறன் தெரிந்து பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com