திசையன்விளை: திசையன்விளை வட்டார இந்து வியாபாரிகள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
செயலா் கே.பி.லிங்கதுரை தலைமை வகித்தாா். தலைவா் ஏ.பி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சுதாகா் பாலாஜி வரவேற்றாா்.
தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை நாளாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. வெள்ளநீா்க் கால்வாய் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். மணிமுத்தாறு அணை தண்ணீா் புத்தன்தருவை குளத்துக்கு 4ஆவது ரீச் மூலம் வர சிறப்பு ஆணை பிறப்பிக்க வேண்டும். திசையன்விளை பேரூராட்சியில் குப்பைகள் அள்ளும் வண்டிகள், டிராக்டா்கள் பழுதடைந்துள்ளதால், புதிய வண்டிகள் பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சி.ஜெயராமன், முத்துகுமரேசன், சுந்தரவேல், சத்திவேலன், முத்துக்குட்டி, பால வெற்றிவேல் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.