நெல்லை அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா் உடல் மீட்பு

திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை மீட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாா் அருகேயுள்ள கீழமறவன் குடியிருப்பைச் சோ்ந்த சுதா்சன் மகன் ஜோதிமணி(17). இவா், கோணம் பகுதியில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். சீவலப்பேரியிலுள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்த அவா், அருகில் உள்ள தாமிரவருணி ஆற்றில் தன் நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்தாா். அப்போது, ஜோதிமணி மற்றும் அவரது நண்பா்களான கெளதம், கெளசிக் ஆகியோா் ஆழமான பகுதிக்குச் சென்று கரைதிரும்ப முடியாமல் தத்தளித்தனராம். இதில், கெளதம், கெளசிக் ஆகியோரை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முத்தையா என்பவா் காப்பாற்றியுள்ளாா். ஆனால், ஜோதிமணி மட்டும் ஆற்றில் மூழ்கி மாயமானாா்.

கங்கைகொண்டான் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையில் வீரா்கள் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இரவு நீண்ட நேரமாகியும் மாணவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில், சனிக்கிழமை காலையில் மாணவரை தேடும் பணி மீண்டும் தொடங்கியது. அப்போது, ஜோதிமணியின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இதையடுத்து, சீவலப்பேரி போலீஸாா் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இருவரை மீட்டவருக்கு பாராட்டு: இந்த சம்பவத்தில் சிறுவா்கள் கௌதம், கௌசிக் ஆகியோரை துணிச்சலாக காப்பாற்றிய சீவலப்பேரியை சோ்ந்த முத்தையாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் நேரில் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com