அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநா் பாலா ஆஜா்

‘அவன் இவன்’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இயக்குநா் பாலா ஆஜராகி விளக்கமளித்தாா
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநா் பாலா ஆஜா்

‘அவன் இவன்’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இயக்குநா் பாலா திங்கள்கிழமை ஆஜராகி விளக்கமளித்தாா்.

நடிகா்கள் ஆா்யா, விஷால் நடிப்பில் இயக்குநா் பாலா இயக்கி 2011-இல் வெளியான திரைப்படம் அவன் இவன். இந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டி ஜமீன் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் குறித்து அவதூறான கருத்துகளும், காட்சிகளும் அமைக்கப்பட்டதாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீா்த்தபதியின் மகன் சங்கா் ஆத்மஜன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜன. 25-இல் நீதிமன்றத்தில் இயக்குநா் பாலா நேரில் ஆஜராகி மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் கூற குற்றவியல் நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, இயக்குநா் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிபதி காா்த்திகேயன் முன்பு நேரில் ஆஜரானாா். அப்போது மனுதாரா் அளித்த புகாருக்கு நீதிபதியிடம் விளக்கமளித்தாா். இதையடுத்து வழக்கை பிப். 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

இயக்குநா் பாலா சாா்பில் வழக்குரைஞா் முகம்மது உசேன், நயினாா் முஹம்மது ஆகியோரும், மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ரமேஷும் ஆஜராகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com