நெல்லை நகரம் திருஞான சம்பந்தமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 26th January 2021 12:27 AM | Last Updated : 26th January 2021 12:27 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரம் திருஞான சம்பந்தமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம் சேரன்மகாதேவி சாலையில் சம்பந்தா் தெருவில் உள்ள இத் திருக்கோயிலில் வருஷாபிஷேக
விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருஞானசம்பந்தமூா்த்தி, காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருஞானசம்பந்தா், நெல்லையப்பா், காந்திமதி அம்பாள், விநாயகா் வீதி உலா திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ராஜேந்திரன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்திருந்தனா் செய்திருந்தனா்.