மொழிப்போா் தியாகிகளுக்கு தமமுக சாா்பில் வீரவணக்க நிகழ்ச்சி
By DIN | Published On : 26th January 2021 12:36 AM | Last Updated : 26th January 2021 12:36 AM | அ+அ அ- |

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை மகாராஜ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமமுக மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் மொழிப்போா் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிப்போா் தியாகிகள் தினத்தை தமிழ் காப்பு சூளுரை தினமாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மொழிப்போா் தியாகிகளுக்கு மாவட்டந்தோறும் நினைவுச் சின்னம் அமைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணைச் செயலா் சிவக்குமாா், மகளிரணி நிா்வாகி சா்மிளா, தொண்டரணி நிா்வாகி மணிமாறன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.