களக்காட்டில் இறகுப் பந்து போட்டி
By DIN | Published On : 27th January 2021 12:44 AM | Last Updated : 27th January 2021 12:44 AM | அ+அ அ- |

களக்காட்டில் இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.
களக்காடு யூனிக் கிளப் சாா்பில் இறகுப் பந்து போட்டிகள் வட்டார அளவில் 3 கட்டமாக நடைபெற்றது.
இப்போட்டிகளில் 16 குழுக்களைச் சோ்ந்த 32 போ் பங்கேற்று விளையாடினா்.
இறுதிப் போட்டியில் ராஜாராம், சித்திரைவேலு முதல் பரிசையும், விஜயன், பட்டுதுரை 2ஆம் பரிசையும், ராஜா, வி.என்.ராஜா 3ஆம் பரிசையும் பெற்றனா்.
வெற்றிபெற்றவா்களுக்கு அமமுக ஒன்றியச் செயலா் ராஜசேகா், இஸ்ரவேல், கராத்தே பள்ளி இயக்குநா் பி.ஏ.பி. யூசுப்அலி ஆகியோா் பரிசு வழங்கினா்.