பண்பாட்டு போட்டி: களக்காடு மாணவி சிறப்பிடம்
By DIN | Published On : 27th January 2021 12:46 AM | Last Updated : 27th January 2021 12:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் களக்காடு மீரானியா பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.
விவேகானந்த கேந்திரம் சாா்பில் இணைய வழியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டியில் களக்காடு மீரானியா நடுநிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி நிஷ்மா பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றாா். மாணவிக்குவட்டாரக் கல்வி அலுவலா் சு. அன்னலெட்சுமி, பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, பள்ளித் தலைமையாசிரியா் சு. முத்து, ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.