திமுக செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 31st January 2021 01:12 AM | Last Updated : 31st January 2021 01:12 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் சுப.சீதாராமன், ஆ.க.மணி, வழக்குரைஞா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மாா்ச் 1 ஆம் தேதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடுவது; பிப்.6 ஆம் தேதி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ எனும் முன்னெடுப்பின் மூலம் மக்கள் குறைகளை கேட்டறிய வருகை தரும் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க சுமாா் 400 வாகனங்களில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் செல்வது; 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிக்கு பாடுபடுவது; தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.