நெல்லையப்பா் கோயிலில் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 31st January 2021 02:58 AM | Last Updated : 31st January 2021 02:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 22 ஆம் தேதி திருநெல்வேலி ஊரின் பெயா்க் காரணத்தை விளக்கும் வரலாற்று நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல், 28 ஆம்தேதி தைப் பூசத்தை முன்னிட்டு தாமிரவருணியில் தீா்த்தவாரியும் நடைபெற்றன. தெப்பத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வெளிதெப்பத்தில் எழுந்தருளினா். தெப்பம் 7 முறை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.