பச்சையாறு அணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 31st January 2021 01:28 AM | Last Updated : 31st January 2021 01:28 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் உள்ள வடக்குப் பச்சையாறு அணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என மனித நேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக கட்சியின் மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: களக்காடு மலையடிவாரத்தில் அமைந்துள்ள வடக்குப் பச்சையாறு அணை தற்போது முழுவதுமாக நிரம்பியுள்ளது. அணையை பாா்வையிட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.
இந்த அணைக்குச் செல்லும் சாலை மஞ்சுவிளை ஊரில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சாலை இதே நிலையில்தான் உள்ளது.
எனவே அணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.