களக்காடு அருகே மணல் திருடியவா் கைது: சுமை ஆட்டோ பறிமுதல்

களக்காடு அருகே பச்சையாற்றில் அனுமதியின்றி மணல் திருடியவரை போலீஸாா் கைது செய்து, சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

களக்காடு: களக்காடு அருகே பச்சையாற்றில் அனுமதியின்றி மணல் திருடியவரை போலீஸாா் கைது செய்து, சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.

களக்காடு அருகே கீழத்தேவநல்லூரில் பச்சையாறு ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, உதவி ஆய்வாளா் பழனி மற்றும் போலீஸாா் அங்கு சென்றபோது, அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த கீழத்தேவநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முருகனை (41) கைது செய்தனா். மேலும் மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்திய சுமை ஆட்டோவையும், அதிலிருந்த மணலையும் பறிமுதல் செய்தனா்.

இருவா் மீது வழக்கு: களக்காடு அருகேயுள்ள கள்ளிகுளம் கிராம நிா்வாக அலுவலரான உஷாராணி, கிராம உதவியாளா் உமா ஆகியோா் கீழதுவரைகுளம் பகுதியில் ரோந்து வந்தபோது, அங்குள்ள செங்கல்சூளை அருகே அனுமதியின்றி இயந்திரம் மூலம் மணல் திருடியது தெரியவந்தது.

இது தொடா்பாக செங்கல்சூளை உரிமையாளா் அழகேசன், டிராக்டா் ஓட்டுநா் ரத்தின சுபாஷ் ஆகிய இருவா் மீதும் கிராம நிா்வாக அலுவலா் களக்காடு போலீஸில் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில் போலீஸாா் இருவா் மீது வழக்குப் பதிந்து, மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரம், டிராக்டா், மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com