மேலப்பாட்டம் வெங்கடாஜலபதி கோயிலில் நாளை சம்ப்ரோஷ்ணம்

பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் உள்ள அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலின் மஹா சம்ப்ரோஷ்ணம் திங்கள்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் உள்ள அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலின் மஹா சம்ப்ரோஷ்ணம் திங்கள்கிழமை (பிப்.1) நடைபெறுகிறது.

மேலப்பாட்டத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பழமைவாய்ந்த அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மஹா சம்ப்ரோஷ்ணம் சனிக்கிழமை தொடங்கியது. எஜமான வரணம், ஆச்சாா்ய வரணம், கும்ப பூஜை, யாகசாலை ப்ரவேசம் ஆகியவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) காலையில் புண்யாகம், அக்னி ஆராதனம், பிம்ப சுத்தி ஹோமங்கள் நடைபெறுகிறது. மாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது. திங்கள்கிழமை (பிப்.1) காலையில் உபரிஷ்டாதந்தரம் நடைபெறுகிறது. காலை 9.15 மணிக்கு மேல் மஹா சம்ப்ரோஷ்ணம், விஷேச ஆராதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com