உவரி அருகே அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
By DIN | Published On : 11th July 2021 01:30 AM | Last Updated : 11th July 2021 01:30 AM | அ+அ அ- |

உவரி அருகே கூடுதாழை கடற்கரையில் சனிக்கிழமை காலையில் அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.
கடலோரக் காவல் படை சிறப்பு உதவி ஆய்வாளா் சுகுமாரன் டால்பினை பாா்வையிட்டு வன அலுவலா் மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தாா். டால்பினை பாா்வையிட்ட மாவட்ட வன அலுவலா் கவுதம், கப்பலில் அடிபட்டு டால்பின் இறந்திருக்கலாம் என தெரிவித்தாா்.
கால்நடை மருத்துவா் மனோகரன் உடற்கூராய்வு செய்தாா். பின்னா் டால்பின் கடற்கரையில் புதைக்கப்பட்டது.