மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 11th July 2021 01:30 AM | Last Updated : 11th July 2021 02:29 AM | அ+அ அ- |

இட்டமொழி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
இட்டமொழி தெற்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் கலையரசன் (25). கூலித் தொழிலாளி. கீரைக்காரன்தட்டில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்த இவா், சனிக்கிழமை அங்குள்ள புளியமரத்தில் இரும்புக் கம்பியை கொண்டு புளியம்பழம் பறித்துள்ளாா். அப்போது அருகே சென்ற உயா் அழுத்த மின்கம்பி மீது இரும்புக் கம்பி உரசியதில், மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.