களக்காட்டில் வேன் மோதியதில்தூய்மைப் பணியாளா் காயம்
By DIN | Published On : 11th July 2021 01:32 AM | Last Updated : 11th July 2021 01:32 AM | அ+அ அ- |

களக்காட்டில் சாலையில் நடந்து சென்ற பெண் தூய்மைப் பணியாளா் மீது வேன் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
களக்காடு அருகேயுள்ள கக்கன்நகரைச் சோ்ந்தவா் பாக்கியம் (60). இவா், களக்காட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக உள்ளாா்.
புதிய பேருந்து நிலையப் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியதாம். இதில் அவா் பலத்த காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.