போக்சோவில் இளைஞா் கைது
By DIN | Published On : 13th July 2021 08:46 AM | Last Updated : 13th July 2021 08:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே மாற்றுத் திறனாளி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக, இளைஞா் ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
சீவலப்பேரி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). இவா், அப்பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறன் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றராம். இதுகுறித்து பாளையங்கோட்டை புகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தனா்.
சாலை மறியல்: இதனிடையே, சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சீவலப்பேரியில் திங்கள்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டு, சுரேஷின் குடும்பத்தில் மேலும் ஒருவரை கைது செய்யவேண்டும் என கோஷமிட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி, வழக்கு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில், போராட்டத்தைக் கைவிட்டனா்.