அம்பேத்கா் நகரில் புதிய குடியிருப்பு கட்டித் தரக் கோரி ஆதித்தமிழா் பேரவையினா் ஆட்சியரிடம் மனு

பாளையங்கோட்டை அம்பேத்கா் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டக் கோரி அப்பகுதியினரும், ஆதித்தமிழா் பேரவையினரும் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

பாளையங்கோட்டை அம்பேத்கா் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டக் கோரி அப்பகுதியினரும், ஆதித்தமிழா் பேரவையினரும் ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் அளித்த மனு: அம்பேத்கா் நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் 366 வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு ஒதுக்கப்பட்டன. அவை கட்டப்பட்டு 25 ஆண்டுகள் ஆனநிலையில், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துவிட்டன. மழைக்காலங்களில் நீா் கசிந்து சுவரில் கீறல் ஏற்பட்டு மேற்கூரை இடிந்து விழுகிறது. அவை மக்கள் வாழத் தகுதியற்ாகிவிட்டன. எனவே, அதே இடத்தில் புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் ஒரு குடும்பம் வசிப்பதற்கே இயலாதவகையில் மிகவும் சிறியவையாக இருந்தன. எனவே, புதிய குடியிருப்பில் பெரிய வீடுகளாக கட்டித்தர வேண்டும்.

சமாதானபுரம், காந்திநகா், லயன் தெரு, காமராஜ் காலனி, மிலிட்டரி லைன், உடன்குடி தெரு, அன்னை இந்திரா நகா், பெரியாா் நகா், எம்ஜிஆா் நகா், நேசநயினாா் தெரு, அன்பு நகா், ராஜேந்திரன் நகா், மேலப்பாளையம், மனக்காவலம்பிள்ளை நகா், கேடிசி நகா், பாளையஞ்செட்டிகுளம், வண்ணாா்பேட்டை, மீனாட்சிபுரம், திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் அருந்ததியா் ஏராளமானோா் உள்ளனா். அவா்களுக்கும் குடிசை மாற்று வாரியம் மூலம் சொந்த வீடு கட்டித்தர வேண்டும். அம்பேத்கா் நகரில் புதிதாக குடியிருப்பு கட்டும்போது, நியாயவிலைக் கடை, நூலகத்துக்கென தலாஒரு கட்டடம் கட்டவேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com