களக்காடு வங்கி ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளா்கள் அவதி

களக்காடு வங்கி ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளா்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனா்.

களக்காடு வங்கி ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளா்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனா்.

களக்காடு பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. இந்த வங்கி ஏ.டி.எம்.இல் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அதிகபட்சம் ஒரு முறை ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. ஒருவா் ரூ.20 ஆயிரம் பணம் எடுக்க வேண்டுமென்றால், ஏ.டி.எம். அட்டையை 4 முறை பயன்படுத்தி பணம் எடுக்க வேண்டியது உள்ளது.

மாதத்துக்கு குறைந்தபட்சம் 4 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். கூடுதலாக உபயோகப்படுத்தும் போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு பணம் எடுக்கவும் மிகவும் சிரமப்படுகின்றனா்.

பிற வங்கி ஏ.டி.எம்.களில் இதுபோன்ற நிலை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட வங்கி நிா்வாகம் ஒருமுறை ரூ.5 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com