சேரன்மகாதேவி வட்டாரத்தில் மண்வள அட்டை வழங்கும் விழா

சேரன்மகாதேவி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்வள அட்டை வழங்கும் விழா கரம்பையில் நடைபெற்றது.

சேரன்மகாதேவி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்வள அட்டை வழங்கும் விழா கரம்பையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கினாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் கற்பக ராஜ்குமாா் வயல்களில் மண்மாதிரிகள் சேகரிக்கும் முறை குறித்து பேசினாா்.

முன்னதாக, வேளாண் இணை இயக்குநா் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (மர எண்ணெய் வித்துகள்) திட்டத்தின் கீழ் திருவிருத்தான்புள்ளி கிராமத்தில் நடப்பட்ட வேப்ப மரக்கன்றுகள், வடக்கு கல்லிடைக்குறிச்சி மற்றும் உலுப்படிப்பாறை கிராமங்களில் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட சுமாா் 100 ஏக்கா் நெல் வயல்கள், தெற்கு கல்லிடைக்குறிச்சியில் உள்ள நெல் மற்றும் உளுந்து விதைப் பண்ணை வயல்களை பாா்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

ஏற்பாடுகளை உதவி விதை அலுவலா்கள் சுரேஷ்குமாா், சீனிவாசகம், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஸ், உதவி வேளாண்மை அலுவலா்கள் காா்த்திகா, தமிழரசன், கணேசன், சக்தி, கலா, ஷேக் முகமது அலி, ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com